தைவான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் யூலி நகரத்தில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. மேலும், நகரின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பயந்து தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நல்வாய்ப்பாக இதுவரை இந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் 146 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.