தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கி 4 சுற்றுகளாக நடக்க இருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் கலந்தாய்வை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை நடக்க இருந்த பொதுப்பிரிவினர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நாட்களுக்கு பிறகு கலந்தாய்வை நடத்த திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.