day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டி உயர்வு : நிதி அமைச்சகம்

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டி உயர்வு : நிதி அமைச்சகம்

புதுடெல்லி : வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம்வரை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தின. அதிகபட்சமாக, தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பெயரில் போடப்படும் ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆகிறது.

கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களில் முதிர்வடையும். ஓராண்டு கால டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி, 6.6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், 2 ஆண்டு கால டெபாசிட் வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட் வட்டி 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.4 சதவீதம் ஆகிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!