இயக்குநர் சசி இயக்கிய ’பூ’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், நாடக கலைஞர் ராமு. அந்த திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த பேனாக்காரன் கதாபாத்திரம் நல்ல வரவேற்றை பெற்றதால், அதன் பின்னர் ’பூ ராமு’ என்றே திரைத்துறையில் அழைப்பட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் ‘நீர்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப் போற்று’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று இரவு மரணமடைந்தார். அவரின் ஆன்மா சாந்தி அடைய பலரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். குணச்சித்திர நடிகராக சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்டே சென்றுள்ளார்.