ராஜராஜ சோழனின் வரலாற்றை மையமாக கொண்ட வரலாற்று புனைவு நாவல் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியின் இந்த நாவலை தற்போது இயக்குநர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில், முதல் தட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரகுமான், விக்ரம்பிரபு, அஷ்வின், மலையாள நடிகர் லால், பார்த்திபன் என நீண்டுகொண்டே போகும் நடிகர் பட்டாளமும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் “வருகிறான் சோழன்” என்ற பெயரில் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. புத்தகத்தில் கதையாக படித்து கற்பனையில் படமாக கண்ட பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் இனி திரைப்படமாகவும் சோழர்களை ரசிக்கலாம்.