பொன்னியின் செல்வன் 2 : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமாக ரெட் ஜெயன்ட் பெற்றுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது.
இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.