ஒப்பந்ததாரர்கள் சாலையில் உள்ள அடிபம்ப், வாகங்கள் போன்றவற்றை கூட அகற்றாமல் சாலையை அமைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட வால்பாறை சாலையில், அண்மையில் நடந்த சீரமைப்பு பணியின்போது அடிபம்பை அகற்றாமலேயே சிமெண்ட் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அடிபம்பை கூட அகற்றாமல் சீரமைப்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், தண்ணீர் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர் மேலும், அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.