சென்னை கோடம்பாக்கத்தில் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலனின் 80ஆவது பிறந்தநாள் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் மேலும் பல பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த மம்தா, முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.