தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரை இசையமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர், அண்மையில் தனது யூடியூப் தளத்தில் ‘ஓ பரி’ என்ற பாடலை பாடி, இசையமைத்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பாடலை யூடியூபில் 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில், பெண்கள் பிகினி உடையில் பாடும் ‘ஓ பரி’ பாடலில் ‘ராமா ஹரே ராமா… கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே…’ என வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அது இந்து மத மக்களின் உணர்வை புண்படுத்துவதாக கூறி நடிகை கராத்தே கல்யாணி ஐதராபாத் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடைப்படையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.