தெஹ்ரான்: சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறியிருப்பதாவது:- “ ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் நஞ்சு இருந்தது தெரிந்தது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கோம் பகுதியில் உள்ள தீவிர மதவாதிகள் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக விஷம் வைத்து இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.