சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, “மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்” என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் பூலித்தேவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.