ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுடப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனிள்ளாமல் அபே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அபேயின் இறுதிச்சடங்கு டோக்கியோவில் நடந்தது. இந்த நிலையில், ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் இன்று டோக்கியோவில் நடத்தப்படுகிறது. இதில், கலந்துக்கொள்ள உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக, பிரதமர் மோடியை ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா முறைப்படி வரவேற்று பேசினார்.