பிரதமர் மோடி நாளை காலை புதுடெல்லியில் இருந்து 9 மணியளவில் நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து நாக்பூர் ரெயில் நிலையத்திற்குச் செல்லும் அவர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.விதர்பா நகரில் நடைபெறும் பொது விழாவில், ரூ.1,500 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பின்னர், மகாராஷ்டிராவிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையையொட்டி, சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு.
பின்னர், நாக்பூர் மற்றும் ஷீரடியை இணைக்கும் ‘சம்ருத்தி மகாமார்க்’ முதல் கட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், நகரின் மிஹான் பகுதியில் ஏய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.