உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், தனது போரிங் கம்பெனி (Boring Company) மூலம் பர்ண்ட் ஹேர் (Burnt Hair) என்ற புதிய வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து, ”தயவு செய்து என்னுடைய பெர்ஃபியூமை வாங்குங்கள், நான் டிவிட்டரை வாங்குகிறேன் ” (Pls buy my perfume so I can twiter) என பதிவிட்டுள்ளார். மேலும், டிவிட்டர் பக்கத்தில் தனது பயோவை வாசனை ‘திரவிய விற்பனையாளர்’ (Perfume Salesman) என மாற்றியும் இருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தினை மஸ்க் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வாசனைத் திரவியத்தை வாங்கிக்கொண்டால் தான், தன்னால் டிவிட்டரை வாங்க முடியும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது இணையவாசிகளிடையே பேசுபொருளாக இருக்கிறது. மேலும், மஸ்கின் இந்த பர்ண்ட் ஹேர் பெர்ஃபியூம் விலை சுமார் 100 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,400 ஆகும்.