பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா மற்றும் வடக்கு பிலிப்பைன்ஸ்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் நேற்று (ஜூலை மாதம் 27ஆம் தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் இதுவரை அந்த நாட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் வரை காயமடைந்துள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்று அப்ரா மாகாணம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 1990ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.