தமிழ்நாடு பொது சுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒரு பகுதியாக “TN நலம் 360” யூடியூப் சேனல் விரைவில் உருவாக உள்ளது. TN நலம் 360 என்ற யூடியூப் சேனல் உருவாக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரின் முன்மொழிவை ஏற்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், யூடியூபை உருவாக்குவதற்கான செலவினங்களை அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற திட்டங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஐஇசி நிதியிலிருந்து பெறலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.