திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் கலந்துகொண்ட தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தி.மு.க. எம்எல்ஏக்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகின்றனர். திமுக குடும்பக் கட்சி-கார்ப்பரேட் மாடல் எந்த பதவியுமே இல்லாத உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். அ.தி.மு.க. தொண்டர்களால் ஆன கட்சி. தொண்டர்கள் மட்டும்தான் அ.தி.மு.க. மற்றவர்களுக்கு இடம் இல்லை என்று “சசிகலா, தினகரனை” மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளார். அம்மா உணவகம் மூடியவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பேசியுள்ளார்.