ஆஸ்திரேலியா நாட்டின் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார். 35 வயதான ஃபிஞ்ச், தாய் நாட்டின் கிரிக்கெட் அணிக்காக 2011 முதல் 146 ஒருநாள், 100 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாகவும் இருந்து வருகிறார்.