இலங்கையில் உள்ள காலே சர்வதேச மைதானத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்தநிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி, 3ஆம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்களுடன் முன்னிலை பெற்றிருந்தது. 4ஆம் நாளான இன்று தினேஷ் சண்டிமல் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதையடுத்து இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டில் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், இலங்கையில் நிலவும் அசாதரணமான சூழலை குறிப்பிட்டு, உலக மக்கள் இலங்கைக்கு நிதியுதவி வழங்க தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அண்டைநாட்டுக்கு விளையாட சென்ற வீரர் ஒருவர், நிலைமையை குறிப்பிட்டு அந்த நாட்டு மக்களுக்காக உதவிக்கேட்டது அனைவரையும் நெகிழச் செய்தது.