காஞ்சிபுரம்: பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ள விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.
அதேவேளையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமைப்பது நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் இன்று பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதனைத் தொடர்ந்து பேரணியாக வந்தவர்களை தடுத்தி நிறுத்தி அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்படி கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.