ஆசியக்கோப்பை 2022 மகளிர் டி20 போட்டியில் இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் பாகிஸ்தானை, வங்கதேசத்தில் இன்று எதிர்கொள்கிறது. இதில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையில் இறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து ஆட்டத்தை பாகிஸ்தானிடம் இழந்துள்ளது. முன்னதாக, இந்திய அணி முதல் ஆட்டத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் மலேசியாவையும், மூன்றாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நாளை வங்கதேச அணியை இந்தியா எதிர்க்கொள்ள இருக்கிறது.