ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்று போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இதில், ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தலா 28 ரன்கள், விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட ஆரம்பித்தது. 19.5 ஓவர் முடிவில் 182 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.