15ஆவது ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் களம் கண்டன. அப்போது, டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, 17 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. மேலும், இரு அணிகளும் மோதும் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.