பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்து நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் உணவு தேவைக்கான காய்கறிகள் பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் மாநிலங்களில் இருந்து வருவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் நிதியமைச்சர் இஸ்மாயில், வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்துவிட்டதாகவும், பாகிஸ்தான் மக்களின் தற்போதைய நிலைமையை சரி செய்ய இந்தியாவில் இருந்து காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசு பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.