அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சீனா மற்றும் ரஷியா தொடர்பான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். அப்போது, பாகிஸ்தானை “எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று” என்று கூறியுள்ளார். மேலும், உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தானைக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் குறித்த அமெரிக்க அதிபரின் கருத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.