பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணி நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் ஒருநாள் போட்டி ரோட்டர்டாம் நகரில் நேற்று நடந்தது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடத் தொடங்கியது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. 315 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது.