புதுடெல்லி : நேற்று முன்தினம், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இத்துறையில் சுமார் ரூ.4,000 கோடி வரை செலவு செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கேஜ்ரிவால் சுட்டிக் காட்டினார். இந்தத் தொகை, டெல்லியின் ஒவ்வொரு தொழிலாளரையும் சென்றடையும் வகையில் திட்டங்கள் அமைக்கவில்லை என அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தினார். எனவே இந்தத் தொகையில் டெல்லியின் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் ஆகியவற்றையும் செய்ய முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.