பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே, கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், சர்க்கரை, பச்சரிசியுடன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு வழங்க முடிவு செய்துள்ளார். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி 2ம் தேதிக்கு பதில் ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக, ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.