தமிழகத்தில் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக இன்று முதல் நவம்பர் 02 வரை சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 5 நாட்களுக்கு சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2ஆம் தேதி வரை மஞ்சள் நிற ஆலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று மற்றும் நாளை ஆரஞ்சு நிற ஆலர்ட் விடுக்கப்பட்டுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.