சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடா்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தார். இதனால், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், வழங்கப்பட்ட பதவிகளும், பதவி நீக்கல்களும் செல்லாத நிலை உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவற்றை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு” என்று ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் “பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓபிஎஸ், ஏன் நீதிமன்றங்களை நாடிச் செல்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி செயல்பட முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அதிமுக அலுவலகத்தின் சாவி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஈபிஎஸ்யிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது. தொடர்ந்து, அலுவலகத்து சீல் வைத்த வருவாய்த் துறையிருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். அதேசமயம், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக நேற்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தீர்ப்பை எதிர்த்து தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளர் என்பது குறிப்பிடத்தகக்து.