இலங்கை நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவின் மத்திய மாநில அரசுகளுடன் பல வெளிநாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வரிசையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டிற்கு, ஓபிஎஸ் தரப்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த மகனும், எம்பியுமான ரவீந்திரநாத் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சமும், இளைய மகன் ஜெயபிரதீப் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சமும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனை அரசு நிதிதுறை செயலாளருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். வரைவோலைகளை பெற்றுக் கொண்டு ஒப்புதல் தர வேண்டும் என்றும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.