day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திமுகவின் B டீம் ஓபிஎஸ், தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் B டீம் ஓபிஎஸ், தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ”நமது அம்மா நாளிதழில் நிதி கையாடலில் முறைகேடாக செயல்பட்டதன் காரணமாகவே மருது அழகுராஜ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பல கட்சிகளுக்கு சென்ற மருது அழகுராஜ் தற்போது கூலிக்கு மாறடிக்கும் செயலாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பேசியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடையாள அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படவில்லை, சட்டவிதிகளின் படிதான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் குறித்து மருது அழகுராஜ் பேசியது தொண்டர்களை கோவப்படுத்தியுள்ளது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கொடநாடு கொலை கொள்ளையை பொறுத்தவரை தவறு செய்தவர்களை போர்கால அடிப்படையில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அப்படி தொடர் குற்றங்களை செய்தவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக தான். எங்கள் மடியில் கனம் இல்லை அதனால் பயம் இல்லை. எந்த வழக்கையும் பார்த்து அதிமுக பயப்படாது, எந்த வழக்கையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. ஓபிஎஸ் கட்சி விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர் தினகரனை ரகசியமாக சந்திக்கிறார். அவருடைய மகன் திமுகவிற்கு ஆதரவாக பேசுவதை தொண்டர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். திமுகவின் B டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். கட்சியை முடக்கும் செயலிலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் அவரை தொண்டர்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜூலை 11ஆம் தேதி நிச்சயம் பொதுக்குழு நடைபெறும் என கூறிய அவர், சசிகலா, தினகரன் கட்சிக்கு திரும்ப முடியாது, அவர்கள் வேன் எடுத்துகொண்டு ஊர் ஊராக செல்வது Waste of time..waste of money..waste of energy..waste of fuel எனவும் விமர்சனம் செய்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!