மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அரசியல் ஆலோசகராக நியமித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக்குவதாக அவர் அறிவித்துள்ளார்.