கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முடிந்தது. செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்றதையொட்டி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தலின் படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021-2022-ம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின், வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-23-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.