நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதில், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக், காகித டம்ளர் மற்றும் தட்டு, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் அடங்கும். இந்த நிலையில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யும் வேலையில் மாவட்டம் நிர்வாகம் பணியாற்றி வருகிறது. அதன்படி, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.