தலைநகர் டெல்லியில் குரங்கு அம்மை காய்ச்சலால் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 13ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 8ஆவது நபராக இந்த காய்ச்சலுக்கு ஆளாகியுள்ள பெண்ணுக்கு எல்என்ஜெபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்றொரு நபர் குரங்கு அம்மை அறிகுறியுடன் இருப்பதால் அவருக்கும் பிரத்யேக சிகிச்சை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.