கர்நாடக மாநிலம் குண்டபுராவில் டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்துள்ளது. மழைக்கு மத்தியில் வரும் ஆம்புலன்ஸ்க்கு வழியை ஏற்படுத்த அங்கிருந்த டோல்கேட் ஊழியர்கள் தடுப்புகளை அகற்றியுள்ளனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஆம்புலன்ஸ் மழையால் நனைந்து இருந்த சாலையில் சறுக்கி அந்தரத்தில் பறந்தவாறு டோல்கேட் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.