இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை முதற்கட்டமாக 8 நகரங்களில் தொடங்கியுள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் ஏர்டெல் தனது 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளது. மேலும், 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எந்தவொரு ஏர்டெல் வாடிக்கையாளரும், ஏர்டெல் 5ஜி பிளஸை பயன்படுத்த முடியும். இதற்கு தேவையான ஒன்று அவர்களிடம் 5ஜி-எனேபிள்டு ஸ்மார்ட்போன். அது ஏர்டெல்-இன் 5ஜி-யை ஆதரிக்க வேண்டும். முன்னதாக, ஜியோ நிறுவனம் 5 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கி இருக்கும் நிலையில் அதன் போட்டி நிறுவனமான ஏர்டெல் 8 நகரங்களில் தொடங்கி இருக்கிறது.