சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.