அமெரிக்க நாட்டின் நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன் பங்கேற்ற இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதையடுத்து, படுகாயமடைந்த ருஷ்டி மருத்துவமனையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். இந்த தாக்குதலால், அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சல்மான் ருஷ்டியின் கண் பார்வை பறிபோகும் நிலை கூட உருவாகலாம் என கூறப்பட்டு வருகிறது. இத்துடன், ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அதே வேளையில், ருஷ்டியின் உடல்நிலை தேரிவருவதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பிறந்த சல்மான் ருஷ்டி 1988ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட நான்காவது நாவலான ‘தி சடானிக் வோ்ஸஸ்’-ல் உள்ள கருத்துக்கள் இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஆணை பிறப்பித்து அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் அறிவித்தார். அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்து வந்தாா். இதைத்தொடர்புப்படுத்தி, ருஷ்டி மீதான தாக்குதலுக்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில், சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து ஈரான் தரப்பில் முதல் முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரையும் குற்றம் சாட்டுவது சரியல்ல என்றும், இந்த விவகாரத்தில் ஈரான் மீது குற்றம் சாட்டுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், லெபனான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தாக்குதல் நடத்திய அமெரிக்கர் தாக்குதலுக்கு இன்னும் காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே சமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த சம்பவத்துக்கு அதிா்ச்சி தெரிவித்துள்ளனா். மேலும், ஹாரிபார்ட்டர் நூல்களின் ஆசிரியரான ஜே.கே.ரெளலிங்கும் இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதையடுத்து, அடுத்தது நீங்கள் தான் என ஜே.கே.ரெளலிங்கு எதிராக பகிரங்க கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.