சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், திருக்குறள் ஆகச்சிறந்த ஒரு படைப்பு. ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் ஒருசேரக்கொண்ட புத்தகம் திருக்குறள். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் நூல். உண்மையில் திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. ஆனால், இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்டப்படுகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாருமே கூறுவதில்லை. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை. திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும், ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று அவர் தெரிவித்துள்ளார்.