வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உடன் பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகேள் என தொடங்கி, தனது பிறந்த நாளன்று சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு தான் என்றைக்குமே அடிமை என குறிப்பிட்டுள்ள அவர், உங்களுடைய அன்பும், ஆதரவும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அதே சமயத்தில் தான் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்க தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை நான் காண இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால் தற்சமயம் தனது பிறந்த நாளுக்காக நீங்கள் சிரமப்பட்டு பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்து விடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடுள்ளார்.