சென்னை : மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்:- “மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 70 சதவீதம் மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடந்தது. இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது, இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும்” என்று தெரிவித்துள்ளார்.