சென்னையை தலைமையிடமாக கொண்ட சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ மற்றும் எஸ்பிஐ வங்கியிடமிருந்தும் பெற்ற ரூ.4000 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை. இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக கூறி நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து நான்கு பேரையும் கைது சிறையில் அடைத்தது. இதையடுத்து, நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ராகுல் தினேஷ் சுரானா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுபொதுமக்கள் சம்பந்தப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி அளவிலான மோசடியான இது கடுமையான பொருளாதார குற்றம். சமூதாயத்திற்கு கேடு விளைவிக்ககூடிய குற்றங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. மேலும், மனுதாரர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.