வானிலை ஆய்வு மையம் விடுத்த அதி கன மழை (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கைப்படி, நீலகிரி மாவட்டத்தில் நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் உத்தரவிட்டுள்ளாா். அதி கன மழை எச்சரிக்கையின் காரணமாக மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை சமாளிக்க அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்பு படையினா் 44 போ் நேற்று உதகை சென்றனர். மேலும், நிலமையை சமாளிக்க தேவையான தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளையும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நீலகிரியிலிருந்து, கேரளா செல்லும் வழிக்கடவு – நாடுகாணி நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.