நியூசிலாந்து நாட்டின் வானத்தில் திடீரென நீல வண்ணத்தில் சுருள் போன்று ஏதோ ஒன்று வினோதமாக தோன்றியுள்ளது. இதனை புகைப்படம் எடுத்தவர்கள் இணையத்தில் பகிரவே அது வைரலானது. ஒவ்வொருவருக்கும் இந்த சுழல் குறித்து ஏதேதோ சந்தேங்கள் எழுந்தாலும், பெரும்பான்மையானவர்களுக்கு இது ஏலியன்களின் பறக்கும் தட்டு என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆராய்ச்சியாளர்களோ, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் தொலைத் தொடர்பு செயற்கைகோளை சுற்றுபாதைக்கு கொண்டு சென்றபோது நீள வர்ண சுருள் உருவாக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், ராக்கெட்டின் உந்துசக்தி மூலம் வெளியேறும் புகை காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் கலந்து சூரிய ஒளியில் படும்போது வண்ண சுருள் உருவாகியிருக்கலாம் என ஆக்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.