இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோவின் New Space India Limited நிறுவனம் 2 ராக்கெட் ஏவ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன.