சென்னை: தி.நகரில் நெரிசலை குறைக்க “எஸ்கலேட்டர்” வசதிகளுடன் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தி.நகர் சென்னையில் மிகப்பெரிய வியாபார ஸ்தலங்களில் ஒன்று ,இங்கு துணி கடைகள், நகை கடைககள்,மற்றும் வீட்டுஉபயோகப் பொருள் கடைகள் ஏராளமாக இருப்பதனால் தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் புறநகர் மின்சார ரெயில்கள் மூலம் தி.நகருக்கு தினமும் ஏராளமானோர் வருவதனால் தி.நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க தி.நகரில் புதிய நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தி.நகர் ரெயில்நிலையம்-பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நடைமேம்பாலம் ரூ.30 கோடி செலவில் 500 மீட்டர் நீளத்தில் , 30அடி உயரத்தில், 14 அடி அகலத்தில் இந்த நடை மேம்பாலம் தற்போது பிரமாண்டமாக அமைக்கப் பட்டு உள்ளது. இந்த நடை மேம்பாலத்தில் பயணிகள், பொதுமக்கள் எளிதில் ஏறி நடந்து செல்வதற்காக 2 “எஸ்கலேட்டர்கள்” மற்றும் சிமெண்ட் படிக்கட்டு வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தி.நகர்-பஸ், ரெயில் நிலையம் இணைப்பு புதிய நடைமேம்பாலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.