day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

புதிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கியுள்ளது : சென்னை ஐஐடி

புதிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கியுள்ளது : சென்னை ஐஐடி

புதுடெல்லி: ஸ்மார்ட் போன்களின் இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பவை OS எனப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம். ஆண்ட்ராய்டு, iOS ஆகிய OSகள் சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வரும் தற்சார்பு இந்தியா கொள்கையின் அடிப்படையில் சென்னை ஐஐடி மாணவர்கள் சுதேசி ஆபேரட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி அதற்கு ‘BharOS’என பெயரிட்டிருக்கிறார்கள். J&K Ops Pvt. Ltd எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘BharOS’ ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆபரேட்டிங் சிஸ்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘BharOS’ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!