நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாநில மற்றும் மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய வளைத்தள ஐ.டி-கள் தொடங்கப்பட்டுள்ளது. இதில், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மாநில மற்றும் மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய அடையாள அட்டை மற்றும் ஐ.டி. பிரிவு சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட ஐ.டி.கள் தனித்தனியாக விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார். முன்னதாக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு முகநூல், டிவிட்டர், யூடியூப் சேனல் மற்றும் குறுதியகம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.